எம்மைப் பற்றி

மேல் மாகாணத்தில் விவசாயக் கைத்தொழில் அபிவிருத்தியின் ஊடாக பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை வழங்கும் நோக்கில் பல்வேறு பயிர்செய்கைகள் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல், வினைத்திறனான பயிர்ச்செய்கையின்பால் மக்களை வலுவூட்டுதல், அதன்பொருட்டு ஈடுபடுத்துதல், தொழில்நுட்பச் சேவைகள், பயிற்சிகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கும் நோக்குடனும் கௌரவ அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில அவர்களின் எண்ணக்கருவுக்கு ஏற்ப, மேல் மாகாண சபையில் 2012 இலக்கம் 01 ஐக் கொண்ட மேல் மாகாண விவசாய சேவைகள் சாசனத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனமே விவசாய சேவைகள் அதிகாரசபை ஆகும்.

வர்த்தகத்தின் அடிப்படையில் விவசாயக் கைத்தொழில்சேவைகளை வழங்குதல், சூழல் நட்புறவுசார் பயிர்ச்செய்கை முறைமையை பலப்படுத்துதல், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்துறைகளை விருத்தி செய்தல், விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு உதவி செய்தல், சிறிய நீர்த்திட்டங்களை புனரமைப்புச் செய்தல் மற்றும் பராமரித்தல், விவசாய தொழில்முயற்சியாண்மையாளர்களின் பொருட்டு நிதி வசதிகளை வழங்குதல் போன்ற கடமைப்பொறுப்புக்களை மேற்குறிப்பிடப்பட்ட சாசனத்திற்கு இயைபாக விவசாய சேவைகள் அதிகாரசபை நிறைவேற்றுகின்றது.

விவசாயசேவைகள்அதிகாரசபையின்இலக்கு

மேல்மாகாணத்தில்விவசாயக் கைத்தொழில்அபிவிருத்தியில் முதன்மை சேவை வழங்குனராதல்

விவசாயசேவைகள்அதிகாரசபையின்செயற்பணி

திறன்களினூடான நட்புறவான பணியாட்தொகுதி ஒன்றின்மூலம் விவசாயக்கைத்தொழில் துறையில் பயனாளர்களுக்கு துரிதமானதும் சிறப்பானதுமான சேவையை வழங்குதல்

மேல் மாகாண விவசாய அமைச்சரின் செய்தி

தன்னிறைவுமிகு விவசாயக் கைத்தொழில் சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் அடித்தளமொன்றைக் கட்டியெழுப்பிய விவசாயசேவைகள்அதிகாரசபை…

இலங்கையில் மனிதவளங்களைஅதிகமாகக்கொண்டதுடன் இலங்கையினுள் பரந்தளவில் நகரமயமாக்கலுக்கு உட்பட்டுள்ள மாகாணமும் மேல் மாகாணமாகும். இந்த நிலைமையின் கீழ் எமது அமைச்சின் விடயப் பரப்பிற்குரித்தான விவசாயத்தை மாகாணத்தினுள் பிரபல்யப்படுத்தியும் மாகாண மக்களை விவசாயக்கைத்தொழிலின் பால் ஈடுபடுத்தி விவசாயக் கைத்தொழிலை எழுச்சி பெறச்செய்வதுமே எமது தீர்மானம் ஆகும்.அத்தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ளும் விருப்பில் மேல் மாகாண விவசாய சேவைகள் அதிகாரசபை தாபிக்கப்பட்டது.இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இலக்குக்கு ஏற்ப தன்னிறைவுமிக்கதான விவசாயக் கைத்தொழில் சமூகமொன்றை உருவாக்குவதற்கு விவசாய சேவைகள் அதிகாரசபையானது, எப்போதும் தொழிற்படுகின்றது.மேல்மாகாணத்தில் விவசாயக்கைத்தொழில் எதிர்நோக்கும் பிரதானமான பிரச்சினையாக காணப்படுவது மனிதவலுப் பற்றாக்குறையும் மட்டுப்படுத்தப்பட்ட காணிகளுமாகும்.இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடி பாடசாலைக் காலம்தொட்டே விவசாயக் கைத்தொழிலில் மக்களை ஈடுபடுத்துவதற்கான பல்வேறுபட்ட செயற்றிட்டங்களும் அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அதிகளவில் நகரமயமாக்கப்பட்ட சூழலொன்றில் பயிர்செய்யமுடியுமான மட்டுப்படுத்தப்பட்ட காணிநிலங்கள் காரணமாக விவசாயக் கைத்தொழிலில் ஈடுபடுவதற்கு மக்கள் பின்நிற்பதுடன், அதற்கான தீர்வொன்றாக மட்டுப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குதல் மற்றும் செய்முறைப் பயிற்சி நிகழ்ச்சிகளை செயற்படுத்துதல் போன்றன மேற்கொள்ளப்படுகின்றன.பசுமைப் புரட்சியானது இலங்கையில் ஏற்பட்டதும் விவசாயக் கைத்தொழிலுக்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுஇலங்கையில் காணப்பட்டபாரம்பரிய விவசாயமானது, படிப்படியாக தூரமாக்கப்பட்டது. அதனால் பாரம்பரிய விவசாய அறிவை ஒன்றுதிரட்டி எதிர்கால சந்ததிக்காகப் பாதுகாக்கும் பொருட்டு விவசாய சேவைகள் அதிகாரசபை பாரம்பரிய விவசாயக் கைத்தொழில் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டது.நகர்ப்புற வீட்டுக்காணிகளை அபிவிருத்தி செய்து நச்சுத்தன்மையற்ற மரக்கறிகள், பழங்கள் போன்றவற்றை நுகர்வதற்கு மக்களைத் தூண்டுவதற்கும் அதிகாரசபை செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.அவர்களது இந்த பிரயத்தனமானது சகல வகைகளிலும் நிறைவேறுவதற்கு வாழ்த்துகின்றேன்!

ගරු අමාත්‍ය ගාමිණී තිලකසිරි,
කෘෂිකර්ම, ඉඩම්, වාරිමාර්ග, ධීවර සත්ව නිෂ්පාදන හා
සෞඛ්‍ය සහ ගොවිජන සංවර්ධන පිළිබඳ අමාත්‍යාංශය.

කෘෂි සේවා අධිකාරියේ සභාපතිතුමන්ගේ පණිවුඩය

කෘෂිකර්මාන්තය නඟා සිටුවීම තුලින් සෞඛ්‍යසම්පන්න සමාජයක්…

බස්නාහිර පළාත තුල වස විසෙන් තොර එළවළු හා පළතුරු වැවීමට ගොවීන් දිරි ගැන්වීම, ගෙවතු ආදර්ශන ස්ථාපිත කිරීම, පාරම්පරික දේශීය වී නිෂ්පාදනය දිරි ගැන්වීම, ගෙවත්තට පැයක් වැඩසටහන ක්‍රියාත්මක කිරීම, මී මැසි පාලනය පිළිබඳ පුහුණු වැඩසටහන් පැවැත්වීම, වප මඟුල් උත්සවය පැවැත්වීම ආදී ව්‍යාපෘතීන් බොහොමයක් කෘෂි සේවා අධිකාරිය විසින් දියත් කර ඇත. මෙමඟින් ස්වයංරැකියා ලාභීන් විශාල පිරිසක් නඟා සිටුවීමට හැකි වී ඇත.

තවද, බස්නාහිර පළාත් කෘෂි සේවා අධිකාරිය විසින් ක්‍රියාත්මක කරනු ලබන ව්‍යාපෘතීන් අතුරින් නව ව්‍යාපෘතියක් ලෙස 2017 වර්ෂයේදී ක්‍රියාත්මක වූ වස විසෙන් තොර ආහාර නිෂ්පාදන අලෙවි මධ්‍යස්ථානය මේ වන විට පාරිභෝගික ජනතාව අතර ඉතාමත් ජනප්‍රිය හා උසස් ප්‍රතිචාර ලැබෙන ව්‍යාපෘතියක් ලෙස සඳහන් කල හැකි අතර, ඒමඟින් අධිකාරියේ ආදායම් උත්පාදන තත්වය ඉහළ ගොස් ඇත.

කෘෂිකර්මාන්තය නඟා සිටුවීම කෘෂිකර්මාන්තයට දායක වන ගොවීන්ට අත්වැලක් වීම අපගේ ප්‍රධානතම අරමුණ වන අතර මෙම අරමුණ සාක්ෂාත් කර ගැනීම සඳහා බස්නාහිර පළාත් කෘෂිකර්ම අමාත්‍ය ගාමිණි තිලකසිරි මැතිතුමාගෙන්ද, කෘෂිකර්ම අමාත්‍යංශ ලේකම් නයනානන්ද නිල්වල මැතිතුමාගෙන්ද, අප වෙත ලැබෙන්නේ මහඟු සහයෝගයකි.

කෘෂිකර්මාන්තය නඟා සිටුවීම සඳහා බස්නාහිර පළාත් කෘෂි සේවා අධිකාරිය විසින් සිදු කරනු ලබන සේවාවන් සඳහා මූලිකත්වය ගෙන කටයුතු කිරීමට ලැබීම භාග්‍යයක් කොට සලකමි.

ගාමිණි කුලරත්න
සභාපති,
කෘෂි සේවා අධිකාරිය.

விவசாய சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளர் சபை

  • தலைவர் – திரு.ஜீ.எஸ்.கே. குலரத்ன
  • உறுப்பினர்- கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் திரு. சுனில் வீரசிங்க
  • உறுப்பினர் – பிரதிப் பிரதம செயலாளர் (மே.மா.) திரு. பந்துல பிரேமகுமார
  • உறுப்பினர் – மாகாண விவசாயப் பணிப்பாளர்  (மே.மா.) திரு. ஐ.யூ. மெண்டிஸ்
  • உறுப்பினர் – விவசாய அமைச்சின் உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) (மே.மா.) – செல்வி டீ.எல்.டப். தேவகே
  • உறுப்பினர் – மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் (மே.மா.) திருமதி. டப்.டீ.ஆர்.பீ. சித்ராங்கனீ
  • உறுப்பினர் – திரு. நெவில் குலரத்ன
  • உறுப்பினர் – திரு. என்.டீ. ஜயபால
  • உறுப்பினர் – திரு. துஷார எஸ் சுரவீர